
திமுக., முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் பேரனும், தற்போதைய திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக.,வின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை தமாகா.,வினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனாரின் பெயரை அழித்து உதயநிதி குறித்த சுவர் விளம்பரம் செய்ததால் ஆத்திரமடைந்த தமாகா தொண்டர்கள் உதயநிதியை வழிமறித்து எச்சரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, உதயநிதி அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறப் படுகிறது.
தமாகா., முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பெயரை அழித்ததற்காக உதயநிதி மட்டுமின்றி திமுக நிர்வாகிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று,த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா கூறியிருந்தார். ஆனால், திருமானூரில் ஜி.கே.மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டது திமுகவினரின் செயல் அல்ல என்று திமுக., மாவட்ட செயலர் சிவசங்கர் கூறியுள்ளார்.