
ஒரு பெண்மணி தன் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அந்த நகைகள் காணாமல் போனதால் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் வெளிவந்த விவரங்களை கேட்டு வாயடைத்துப் போனார்.
கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண்மணி வங்கி லாக்கரில் வைத்த தங்க நகைகள் காணாமல் போனது தெரிந்த உடனே போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்கள் விசாரணை மேற்கொண்டு என்ன நடந்தது என்று தெரிவித்த போது அவர் வாயடைத்துப் போனார்.
குடிவாடாவில் குத்தா விஜயலட்சுமி வசித்து வருகிறார். அவருடைய பிறந்த ஊர் வேலேரு என்பதால் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவருடைய மகன் ஹிரண் தீய பழக்கங்களுக்கு அடிமையானான். கெட்ட பழக்கங்களுக்கு பணம் இல்லாததால் தாயை ஏமாற்ற திட்டம் தீட்டினான். தாய் தங்க நகைகளை வங்கியில் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொண்டான்.
இந்த மாதம் 10 ம் தேதி வங்கி ஊழியர் யார்லகட்டா மதன்மோகன உதவியோடு லாக்கரை திறந்து அதில் இருந்த 60 கிராம் தங்க நகைகளை எடுத்துள்ளான். அவற்றை எடுத்துச் சென்று முத்தூட் ஃபைனான்ஸில் அடகு வைத்து கொஞ்சம் பணம் பெற்று தன் கெட்ட பழக்கங்களுக்கு செலவு செய்தான்.
சில நாட்களுக்குப் பிறகு லாக்கரில் இருந்த தங்க நகைகள் காணாமல் போன விஷயம் விஜயலட்சுமிக்கு தெரிய வந்தது உடனே போலீசாருக்கு புகார் அளித்ததும் போலீசார் களத்தில் இறங்கினர்.
வங்கி அதிகாரிகளை விசாரித்தபோது பெண்மணியின் மகனே லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரிந்தது. வங்கி ஊழியரைம் பெண்மணியின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள்.
நூஜிவீடு கோர்ட்டில் நிறுத்தினார்கள். இடைத்தரகர்கள் உதவியோடு தங்கத்தை கூட கைப்பற்றினார்கள். ஹிரண் இன்டர் படித்து வருகிறான். அவன் தீய பழக்கங்களுக்கு அடிமையானதால் லாக்கரிலுள்ள தங்க நகைகளைத் திருடியுள்ளான்.
வங்கி நிபந்தனைகளுக்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.