செருப்பு வீச்சு, மை வீச்சு.. செவுட்டில் அறை வரிசையில்… ஆம் ஆத்மியின் ஸ்பான்ஸர் ஷாகீன் பாக் துப்பாக்கிச்சூடு!

aamaadhmi 1 - 2026

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்ட கபில் குஜ்ஜார், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளனர் போலீஸார்.

ஆம் ஆத்மி கட்சி வளர்ந்ததே, அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை நோக்கி செருப்பு வீசுவது, மை வீசுவது, எங்காவது பொது இடத்தில் திடீரென செவுட்டில் அறைவது, தன் நிர்வாகத்தை எதிர்த்து தானே உண்ணாவிரதம், போராட்டம் நடத்துவது என்று அரவிந்த் கேஜ்ரிவால் செய்த ‘அனுதாப அலை’ நாடக உத்திகளின் வரிசையில் தற்போது ஷாகீன் பாக் பகுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூடும் இடம் பிடித்துள்ளது. தில்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் நிலையில், இது போன்ற துப்பாக்கிச்சூடு நாடகம், பழியை வேறு பக்கம் திருப்பி ஆதாயம் அடையும் நோக்கில் ஆம் ஆத்மியால் நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

aamaadhmi 2 - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, தில்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள், கடந்த மாதம், 30ல் நடத்திய பேரணி மீது, துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஷாஹீன் பாக் பகுதியில், பிப்.,1ல் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது. போராட்டம் நடந்து வரும் பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த கபில் குஜ்ஜார் என தெரிந்தது.

கைது செய்யப்பட்ட கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், கடந்த 2019ம் ஆண்டில் அவர் தனது தந்தையுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மியின் தலைவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனை ஆம் ஆத்மி கட்சியினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள அக்கட்சி, காவல் துணை ஆணையர் தேர்தல் விதிமுறைளை மீறியதாக தெரிவித்துள்ளது. மேலும் துணை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

aamaadhmi 3 - 2026

இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், தில்லி போலீசார் பா.ஜ.,வின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக குற்றம்சாட்டி உள்ளார். இது பாஜக.,வின் சதி என்றும், அமித்ஷாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று என்றும், காவல் துறை துணை ஆணையர் தாமரைச் சின்னத்தைக் குத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories