அக்.16: தமிழகத்தில் இன்று… 4389 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image
corona-image

தமிழகத்தில்,  ஒரே நாளில் புதிதாக 4,389 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 4,389 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரையிலான ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 6,79,191 ஆக அதிகரித்துள்ளது  

சென்னையில் ஒரேநாளில் 1140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் இதுவரையிலான ஒட்டுமொத்த பாதிப்பு 1,87,852 என உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்தனர் இவர்களில் 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 37 அரசு பொது மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529  ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து  5,245 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதை அடுத்து, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6,27,703 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட  40,959 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் 

district-wise-corona-cases-oct-16
district-wise-corona-cases-oct-16

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.