தமிழகத்தில் கன மழை பெய்யுமாம்! வானிலை மையம் எச்சரிக்கை!

Published:

Regional Meteorological Center 1 1
Regional Meteorological Center 1 1

தமிழகம் மற்றும் ஒடிசா ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது . ஏற்கெனவே கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.  மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

 தற்போது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை காலை 7 மணிக்கு  தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டு உள்ளது சில இடங்களில் லேசான மழைப் பொழிவு இருந்து வருகிறது 

இதனிடையே மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.  இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும்  என்றும்  எனவே மீனவர்கள் வரும் 23 ஆம் தேதி வரை கடலுக்கு  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்   எச்சரித்துள்ளது

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img