பேராவூரணி செங்கமங்கலம் துணை மின்நிலையத்தில் ஆயுதபூஜை!

Published:

peravoorani
peravoorani

பேராவூரணி: தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் துணை மின் நிலையம் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது .

விழாவிற்கு ,உதவி செயற்பொறியாளர் எஸ். கமலக்கண்ணன் தலைமை வகித்தார். உதவி மின் பொறியாளர்கள் என். ஹரிசங்கர், ஆர் பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைமின் அலுவலகத்தில் பூஜை பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு மின்சார வேலைகள் சம்பந்தப்பட்ட கருவிகள் கிப்ட்டாக வழங்கப்பட்டது. தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் எஸ் கமலக்கண்ணன் பணியாளர்களுக்கு மின்சார வேலைகளை மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் பார்க்க வேண்டும் என கூறினார்.

விழாவில், இளமின்பொறியாளர் கே. மணிகண்டன், ஜே. சிவசங்கர், போர்மேன்கள் எம்.ஜெயசந்திரன், கே. வெங்கட சுப்பிரமணியன், வருவாய் மேற்பார்வையாளர் சுபாஷ் சந்திரபோஸ், மின்பாதை ஆய்வாளர் எஸ். கருணாகரன், வணிக ஆய்வாளர் ஒய்.ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img