பசும்பொன் தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடம் ஆக்க கோரிக்கை!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
pasumpon-muthuramalingam-netaji
pasumpon-muthuramalingam-netaji

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரி முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பார்வட் கட்சி தலைவர் கதிரவன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பசும்பொன் தெருவிலுள்ள இந்திரா காந்தி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குதான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமது இறுதி நாட்களில் வாழ்ந்து மறைந்தார்.

எனவே இந்த இடத்தை நினைவிடமாக மாற்றக் கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளையினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தலைவர் கதிரவன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.