பேரக் குழந்தைகள் விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த தாத்தா

Published:

lions-boys பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு 2 சிங்கக் குட்டிகளை விளையாட்டு தோழனாக வாங்கி தந்துள்ளது.

இங்குள்ள ரஃபா நகரில் வசிக்கும் பாலஸ்தீன அரசு ஊழியரான சயிட் எல்டின் அல்-ஜமால்(54) என்பவர் உள்ளூரில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து இந்த சிங்கக் குட்டிகளை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் உள்ள பேரன், பேத்திகளுடன் விளையாட விட்டிருக்கிறார். தற்போது இரண்டரை மாத குட்டிகளாக இருக்கும் இந்த சிங்கங்களிடம் இன்னும் சில நாட்களுக்கு மேல் குழந்தைகள் விளையாடி மகிழ முடியாது என கவலை தெரிவிக்கும் இவர் வளர, வளர சிங்கங்களுக்கு ரத்தவெறி ஏற்படுவது இயல்பானதுதான் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். நான்கு மாதங்களாகி விட்டால் இவை ஆபத்தானவை ஆகிவிடும். ஆறு மாதங்களாகி விட்டால் மிக, மிக ஆபத்தானவையாக மாறிவிடும். எனவே, இன்னும் ஒரு மாதத்தில் இந்த குட்டிகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்க முடிவு செய்துள்ளேன். காஸாவில் இருக்கும் யாராவது வாடகைக்கு கேட்டால் இவற்றை காட்சிப் பொருளாக வாடகைக்கு விடலாமா? என்று யோசித்து வருகிறேன் என இவர் கூறுகிறார்.
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img