பழனி தனி மாவட்டம்: பிரச்சாரத்தில் உறுதியளித்த முதல்வர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
cm - 2026

தமிழகம் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக கூட்டணி வலிமையான வெற்றி கூட்டணி. இந்த தேர்தலோடு திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வரும்.

தைப்பூசத் திருநாளை சிறப்பாக கொண்டாட அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகிறது அதிமுக அரசு. நிலமும், வீடும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசு நிலம் வாங்கி காங்கிரட் வீடு கட்டித்தரும். இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்க இல்லம்தோறும் வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்துள்ளனர் எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.