குறைகூறும் எதிர்க் கட்சிகளின் தேர்ந்த மோசடி!

அடடே... அப்படியா? புகார் பெட்டி
narayanan-thirupathi
narayanan-thirupathi

கடந்த ஜூன் மாதம் பீகார் தேர்தலின் போது, கொரோனா தொற்று மிக அதிக அளவில் இருந்த போதே, மெய் நிகர் பிரச்சாரம் மட்டுமே செய்ய வேண்டும். பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்று கொண்டது பாஜக. ஆனால்,

“மெய்நிகர் பிரச்சாரம் சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டை உறுதிப்படுத்தும்.சமத்துவ கொள்கைக்கு எதிரானது. இணைய வசதியில்லாத ஏழை மற்றும் கிராமப்புற மக்களை ஜனநாயக கடமையில் பங்கேற்பதை அகற்றும். ஆகவே நாங்கள் இதை ஏற்க மாட்டோம். பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளை கட்டாயம் நடத்துவோம். இந்த முறையானது அரசியல் கட்சிகளிடையே தேர்தல் களத்தில் சமநிலையில்லாத நிலையை தேர்தல் ஆணையமே, அதிகாரபூர்வமாக உருவாக்கும் கேலிக்கூத்து. தேர்தல் பிரச்சாரத்தை முடக்கி சில கட்சிகளை வெளியேற்ற செய்யும் சதி”

…என்று சொன்னது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள். ஆனால், இன்று வழக்கம் போல தேர்தல் ஆணையத்தை குறைகூறி அதற்கு காரணம் பாஜக என்று குற்றச்சாட்டை கூறுவது எதிர்க்கட்சிகளின் மோசடியே.

  • நாராயணன் திருப்பதி. (பாஜக., செய்தித் தொடர்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.