வெள்ளரிக்காய் புளிச்சேரி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
vellari Puliseri
vellari Puliseri

வெள்ளரிக்காய் புளிச்சேரி

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய். 1மீடியம் சைஸ்
கட்டி தயிர். 1 கப்
பச்சை மிளகாய். 4
தேங்காய் துருவல். 1 கப்
மஞ்சள் தூள். 1/2 டீ ஸ்பூன்
ஜீரகம். 1/2 டீ ஸ்பூன்
தாளிப்பதற்கு :
எண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
கடுகு. 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம். 1/2 டீ ஸ்பூன்
வற்றல் மிளகாய். 3
கறிவேப்பிலை. 2 தண்டு
உப்பு. தேவைக்கு
செய்முறை
வெள்ளரிக்காயை தோல் நீக்கி சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் வைத்து அடுப்பில் வைக்கவும்.
அதில் வெள்ளரிக்காய் துண்டுகளைப் போட்டு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு. டீஸ்பூன் உப்பு போடவும்.
நான்கு பச்சை மிளகாயை கீறி அதனுடன் போட்டு பாத்திரம் மூடி வைத்து வேக வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், ஜீரகம் சேர்த்து வடிய அரைக்கவும்.
இந்த அரைப்பை வெந்து கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் சேர்த்து நன்றாகக் கிளறி கொடுத்து கொதிக்க விடவும்.
அரைப்பு அரைத்த ஜாரில் ஒரு கப் தயிரை விட்டு ஒரு கலக்கு லேசாக கலக்கிக் கொள்ளவும்.
நன்றாக கொதித்து கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் தயிரைச் சேர்க்கவும். அடுப்பை ஸிம்மில் வைக்கவும்.
தயிர் சேர்த்த பிறகு கறியைக் கொதிக்க விடக்கூடாது. எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி கொடுக்கவும்.
கறியில் ஆவி வந்ததும் இறக்கி வைக்கவும்.
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கறியில் சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.