வேண்டாம்னு சொல்றவங்களையும் ஏறிட்டு பார்க்க வைக்கும் கூட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Cucumber joint
Cucumber joint

வெள்ளரிக்காய் கூட்டு

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 3,
பாசிப்பருப்பு – 1 கப்,
தேங்காய் – துருவல் – 4 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :

வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அருமையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.