மிசோரம் மாணவர்களின் கல்யாண உறுதிமொழி!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
misoram students - 2026

மிசோரம் மாணவர்களின் வினோதமான உறுதிமொழி இது. தங்கள் மக்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக வெளிமாநிலத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று மிசோரம் மாநில உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மிசோரம் மாநிலத்தில் சட்டப்பிரிவு 371 இன்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசின் அனுமதியின்றி மத மற்றும் கலாச்சார பழக்க வழக்கங்கள் நில உரிமை உள்பட பல்வேறு சட்டங்களில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

மேலும் வெளி மாநிலத்தவர்கள் உள்நுழைய அனுமதி சீட்டை பெறுவது கட்டாயம். வெளிமாநிலத்தவர்கள் மிசோரம் மாநிலத்தில் நிலம் வாங்க முடியாது… போன்ற பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன.

இந்நிலையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலத்தவர்களைத் திருமணம் செய்துகொள்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இதை அடுத்து மிசோ எனப்படும் மாணவர் அமைப்பின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

மிசோரம் மக்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம் வெளிமாநிலத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.