
இந்து அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்துாரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்திய வேலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் கடந்த 1989 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோயிலாக அறிவிக்கப்பட்டது.

இக்கோயில் திருக்கோயிலுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளதால் இதை இந்துசமய அறநிலையத்துறை கொடைகள் சட்டப்பிரிவு 30 முதல் 63 வரையில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இக்கோயிலை இத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று மதுராந்தகம் சரக ஆய்வாளர் ஒரு அறிக்கை சமா்பித்தார்.
இது தொடா்பாக ஆய்வு செய்ய இந்து சமய அறிநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலா் சக்திவேல், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் சுரேஷ், மனோகரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் குழுவினா் கோரும் தகவல்கள் , ஆவணங்கள், பதிவேடுகள் ஆகியவற்றறை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க பேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணைா் தனபால் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு நகலுடன் உதவி ஆணையா் ரமணி தலைமையிலான குழுவினர் மேல்மருவத்துார் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்றனா. ஆனால் மேல்மருவத்துார் கோயிலில் இருந்த பணியாளா்கள் இவர்களை ஆய்வு செய்யவிடாமல் இவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
இதனையடுத்து கோயிலை ஆய்வு செய்யாமல் திரும்பிய அற நிலையத்துறை அதிகாரிகள் தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் பணியாளா்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனா்.
இந்நிலையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடா்பாக வேலுார் இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்து அறநிலையத் துறையின் அனுமதியில்லாமல் மேல்மருத்துார் கோயிலை ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வு நடத்திய வேலுார் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.



