தெலுங்கு தேசம் கட்சி தோல்விக்கு சந்திரபாபு நாயுடுவின் வீட்டு வாஸ்து தோஷமே காரணம் என்று “வாஸ்துபுருஷ டாக்டர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப் பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அதற்கு சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் வாஸ்து சரியில்லாததே காரணம் என்கிறார் வாஸ்து நிபுணர். பாபு இன்னும் அதே வீட்டில் இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் இடையில் விரோதங்கள் வரும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
அதே போல், ஆந்திர மாநில சட்டமன்றக் கட்டடத்தில் கூட வாஸ்து தோஷம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளதும், அதன் பாதிப்பு ஜகனுக்கும் உண்டு என்று சொல்லியிருப்பது பலருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சந்திரபாபு தற்போது வசிக்கும் வீட்டால்தான் ஆந்திரத் தேர்தலில் தெலுகு தேசம் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது என்று அடித்துக் கூறியிருக்கிறார் வாஸ்து புருஷ பிரசாத்!
ஆந்திர மாநிலம், உண்டவல்லி என்ற ஊரில் கரைக்கட்டு மீது பாபுவின் வீட்டிற்கு இரு புறத்திலிருந்தும் சாலைகளை அமைத்திருக்கிறார்கள். அது வாஸ்து தோஷம் என்று கூறுகிறார் அவர்.
மற்றொரு வாஸ்து நிபுணரான லிங்கமனேனி, சந்திரபாபுவின் வீட்டிற்கு சரியாக வாஸ்து பின்பற்றவில்லை என்கிறார். அவர் வீடு உள்ள இடம் பாம்புகள் திரியும் புற்றுள்ள பிரதேசம் ! சந்திர பாபு நாயுடு, முதல்வர் ஆன பின்னர் அங்கே அருகில் வாஸ்துவைக் கண்டு கொள்ளாமல் பல கட்டடங்களை கட்டி விட்டார்கள். அதனால்தான் இத்தகைய நிலை அவருக்கு ஏற்பட்டது என்றார் அவர்.
சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவை சகாக்கள் பலரும் தோல்வி அடைந்ததற்கு பாபுவின் வீட்டு வாஸ்து தோஷமே காரணம். பாபு அந்த “கரைக்கட்டு” வீட்டை விட்டுச் சென்றால் தான் அவருக்கு நல்லது . இல்லாவிட்டால் வீட்டில் விரோதங்கள் வளரும்! பாபுவுக்கு உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் வரும் என்கிறார் வாஸ்து புருஷ் பிரசாத்.
அதே போல், அவரது மகன் நரா லோகேஷ்க்கு தோல்வி ஏற்பட்டது கூட அந்த வீட்டு வாஸ்து சரியில்லாததுதான் காரணம் என்றார் வாஸ்துபுருஷ் பிரசாத். சந்திரபாபு விஜயவாடாவுக்கு வீடு மாறினால் மேலும் தொல்லைகள் வளரும்! அவர் குண்டூர் பக்கம் சென்றால் அவருக்கு நன்மை என்கிறார் இந்த வாஸ்து நிபுணர்.
ஆந்திரப் பிரதேச சட்டமன்றக் கட்டடத்திற்கு கூட வாஸ்து தோஷம் உள்ளது! சட்டமன்றக் கட்டடத்தின் பிரதான வாசலுக்கு “வீதிசூலம்” இருக்கிறது! அந்த கேட் உள்ளே கட் செய்து கட்டப் பட்டது தோஷம் என்றார் அவர்.
புகழ் பெற்ற தலைவர்கள் வளமான அமைச்சர்கள் செல்வந்தர்களான தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்ததற்கு இதுவே காரணம்! சட்டமன்றத்தில் வாஸ்துவை சரிசெய்யாவிட்டால் முதலமைச்சர் ஜெகனுக்கு கூட எதிர்காலத்தில் தொல்லைகள் ஏற்படும் என்கிறார் அவர்.
ஜெகன் வீட்டிற்கு வாஸ்து அறிவுரை கூறிய வாஸ்துபுருஷ பிரசாத், ஜகன் வீட்டிற்கு நல்ல வாஸ்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் சட்டமன்றத்தில் வாஸ்துவை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சந்திரபாபுவின் அரசுக்கு மக்கள் இவ்வளவு தூரம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு வாஸ்து சரியில்லாததே காரணம். விஜயவாடாவின் வாஸ்து கமர்ஷியல் வாஸ்து! விஜயவாடா பிரதேசம் ஆட்டோமொபைல் இரும்பு தொழிற்சாலைகளுக்கு அனுகூலமானது. ஆயினும், குண்டூரில் அரசியல் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்கிறார் இவர்.
ஜெகன் பதவி ஏற்கும்போது ஈசானிய திசையைப் பார்த்தபடியே பதவிப் பிரமாணம் செய்தார்! அப்போது அவருக்கு எதிராக ஒரு கேட் திறந்து வைக்கப்பட்டது! மேற்கே கனக துர்கா தேவியின் மலை இருந்தது கூட வாஸ்து அனுகூலத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார் டாக்டர் பிரசாத். ஜகனுக்கு வாஸ்து ஆலோசகராக இருப்பவர் வாஸ்து புருஷ டாக்டர் பிரசாத் என்பது குறிப்பிடத் தக்கது.




