poster
poster

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு திருமணத்திற்காக வரன் பார்க்க வரும் நபர்களிடம், சிலர் அவதூறு கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துவதாக தெரியவருகிறது.

இந்த காரணத்தால் பல பிள்ளைகளின் திருமணம் தடைபட்டுள்ள நிலையில், இதனால் பிள்ளைகளின் பெற்றோர்கள் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இதுபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட திருமணம் ஆகாத இளைஞர்கள் சேர்த்து தங்களது சோகத்தை போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்த போஸ்டரில், ” கரம்பயம் பகுதியில் திருமணத்திற்காக வரன்கள் குறித்து விசாரிக்கும் வீட்டாரிடம் இல்லாததை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்திய நெஞ்சங்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் நன்றி.

இந்த பணிகளை திறம்பட செய்யும் சில ஆண்கள், சில பெண்கள், ஒரேயொரு தேநீர் கடை வைத்துள்ள அன்பு உள்ளத்திற்கு நன்றி.

இவர்களின் நற்பணிகள் மேலும் தொடர எங்களின் சார்பில் தற்போது போஸ்டர் முடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இவர்களின் நற்பணி தொடர்ந்து வரும் பட்சத்தில், விளம்பர பேனரில் உங்களின் புகைப்படம் மற்றும் பெயர் தொடர்பான ஆதாரங்களும் இடம்பெறும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆகவே விரைந்து போஸ்டர் அளவுக்கு உங்களுக்கு நற்பணியை செய்யும் படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம் ” என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending