ஹூலா ஹூப்பிங்ஙில் கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்! பியர் கிரில்ஸ் பாராட்டு!

Published:

Adav Sukumar - 2026

ஹூலா ஹூப்பிங்கில் கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கும் சென்னையை சேர்ந்த சிறுவன் ஆதவ் சுகுமாரை, வைல்ட் லைஃப் சாகசக்காரர் பியர் கிரில்ஸ் பாராட்டியுள்ளார்.

ஹூலா ஹூப்பிங் (hula hooping) எனப்படும் கனமான வளையத்தை உடலில் வைத்து சுழற்றுவதில் கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆதவ் சுகுமார். ஆனால் அவர் அச்சாதனையை பிறர் போல சமனான தளத்தில் செய்துவிடவில்லை.

இடுப்பில் வளையத்தை சுழல விட்டவாரே 50 படிகளை அதுவும் 18.28 நொடிகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் சாதனை குறித்த வீடியோவும் பகிரப்பட்டிருக்கிறது.

மிகக் கடினமான இந்த சாதனையை செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவன் ஆதவ் சுகுமார் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி படைக்கப்பட்ட இந்த சாதனையை சமீபத்தில் அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம், அவர்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆதவ் சுகுமாரின் கின்னஸ் சாதனை குறித்த வீடியோவை பகிர்ந்திருக்கிறது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
Adav Sukumar1 - 2026

முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த அஷ்ரிதா ஃபர்மன் என்பவர் 2018ம் ஆண்டு ஹூலா ஹூப்பிங் செய்துகொண்டே 50 படிகளை 23.39 விநாடிகளில் ஏறியதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது,

அதனை சென்னை சிறுவன் ஆதவ் சுகுமார் முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். சிறுவன் ஆதவ் சுகுமாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Bear Grills - 2026

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வைரலாகியுள்ள ஆதவ் சுகுமாரின் வீடியோ, டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் எனும் சாகச நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சாகச பிரியர் பியர் கிரில்ஸின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் சென்னை சிறுவன் ஆதவ் சுகுமாரின் கின்னஸ் சாதனையை பார்த்த பியர் கிரில்ஸ் ‘வெல் டன் ஆதவ்’ என பாராட்டி கமெண்ட் செய்திருக்கிறார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img