young girl got violations chellan
young girl got violations chellan

அந்த இளம்பெண்ணுக்கு விதிமீறல்களுக்காக 22 சலான்கள் விநியோகித்துள்ளனர் போலீஸார். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டுப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோரை அழைத்து… வேறென்ன வசூலை முடித்து, அட்வைஸ் மழை பொழிந்து அனுப்பியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளைக் கண்டுகொள்ளாமல் இஷ்டம் போல் அலைந்து திரிந்த அந்த இளம்பெண்ணுக்கு போலீஸார் பெருமளவில் விதிமீறல்களுக்கான சலான்களை விதித்தார்கள். பின்னர் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பெற்றோர் முன்னிலையில் அபராதக் கட்டணத்தை வசூல் செய்தார்கள்.

ஹெல்மெட் இல்லாமல் டிரைவிங், செல்போன் டிரைவிங் போன்ற பல காரணங்களுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து அந்தப் பெண்ணுக்கு கவுன்சிலிங் வேறு கொடுத்தார்கள்.

போக்குவரத்து விதிகளை மீறினால் எப்படிப்பட்டவர் ஆனாலும் சரி டிராபிக் போலீசார் விடுவதில்லை. அதுவும் இந்த கொரோனா கால நெருக்கடி நிலையில், விஐபி.,களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை அனைவருக்கும் அபராதம் விதிக்கிறார்கள்.

அண்மையில் ஓர் இளம்பெண்ணுக்கு வந்த சலான்களின் எண்ணிக்கை டிராபிக் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் இளம்பெண் ஒருவர், டிராபிக் நிபந்தனைகளை மீறி போலீசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இந்த இளம்பெண் ஸ்கூட்டியில் போக்குவரத்து விதிகளைக் கண்டுகொள்ளாமல் பயணித்து வந்தார். அதனால் அவருக்கு 22 முறை சலான்கள் விதிக்கப்பட்டன. அதில் செல்போன் டிரைவிங் ஹெல்மெட் இல்லாமல் பயணித்தது போன்றவை மிக அதிக அளவில் அபராதத்துக்கு ஆளாயின. குக்கடபல்லி போலீசார் சலான்களின் அபராதக் கட்டணமாக அந்த இளம்பெண்ணின் பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் ரூ.9,070 வசூலித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending