register-marriage
register-marriage

மருமகனை காதலித்து மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

முஸாபர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் தனது மருமகனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார். 2 பேரக் குழந்தைகளுக்கு பாட்டியான அவர், தன்னை விட சரிபாதி வயதுள்ள மருமகனுடன் காதல் வயப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், காதல் மயக்கத்தில் இருந்த அந்த ஜோடி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

எதோ ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில், மீண்டும் நேற்று வீடு திரும்பியுள்ளனர். பிரச்சனைகளை மறந்து தங்களை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் என நினைத்து அவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

ஆனால், செய்துள்ள காரியத்தை மறக்க முடியாத குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், அவர்களை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அப்போது, இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், ஆதலால் தங்களை வாழ விடுமாறு கெஞ்சியுள்ளனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தினர், போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அதன்படி, விரைந்து வந்த போலீசார், பொது ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற பிரிவில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியாரையும் மருமகனையும் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending