யாத்ரா 2ஆம் பாகம்! ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சினிமா
jegan mohan reddy
jegan mohan reddy

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்ரா’ இரண்டாம் பாகம் எடுக்க தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

இந்திய சினிமாவில் இது ‘பயோபிக்’ காலம். அதுவும் அரசியல் தலைவர்களின் அதிகமான ‘பயோபிக்’ திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்றில் உயிரிழந்தார். அந்த சோகம் அம்மாநிலம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Screenshot 2021 0702 205547 - 2026

ஆந்திர முதல்வர்களில் என்டிஆருக்கு பிறகு மக்கள் செல்வாக்கு கொண்ட நபராக அறியப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. இதனையடுத்தே ‘யாத்ரா’ படம் எடுக்கும்போதே ஆந்திராவின் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தப் படத்தை ஒய்எஸ்ஆர் மகள் ஷாஷி தேவி ரெட்டி தயாரித்திருந்தார். இதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ரூ.28 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

மஹி வி ராகவ் இயக்கத்தில் தேர்தலுக்கு முன்பு வெளியான இத்திரைப்படம் ஒய்எஸ்ஆர் மகன் ஜெகன்மோகனுக்கு நன்றாகாவே கைகொடுத்தது.

jegan mohan - 2026

இந்த நிலையில், ‘யாத்ரா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டாம் பாகத்தில் ஒய்எஸ்ஆர் வாழ்க்கையை பற்றி எடுக்க போவதில்லையாம்.

ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்ரா’ இரண்டாம் பாகம் எடுக்க போவதற்காக தெரிவிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்முட்டி வாழ்ந்திருந்த நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில், ‘ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ வெப் சீரிஸில் நடித்திருந்த ப்ரதிக் காந்தி நடிக்க இருக்கிறார்.

ganthi - 2026

இயக்குநர் மஹி வி ராகவ் ஏற்கெனவே ப்ரதிக் காந்தியை சந்தித்து ஸ்கிரிப்டை விவரித்துவிட்டதாகவும், இதில் கதை பிடித்துவிட்டு, நடிகர் ப்ரதிக் காந்தி உடனே படத்துக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் தெலுங்கு முன்னணி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக சாயலில் ப்ரதிக், ஜெகனுடன் நன்றாகவே ஒத்துப்போவார் என்பதால் இயக்குநர் மஹி வி ராகவ் அவரை நடிக்க வைக்க முதலில் அணுகியுள்ளார் என்றும், முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ‘பான்-இந்தியா’ திரைப்படமாக தயாராகும் என்றும் கூறியுள்ளார்கள்.

jegan - 2026

நாடு முழுவதும் ப்ரதிக் ‘அறியப்படும் நாயகராக’ இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என படக்குழு கூறியுள்ளது. என்றாலும், உடனே இந்தப் படத்தை தொடங்கவில்லையாம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் மஹி வி ராகவ் தற்போது ஒரு காமெடி படத்தை எடுத்து வருகிறார். அதை முடித்த பின்பே இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.