ministers help farmer - 2026
  • எலி கடித்த இரண்டரை லட்சம் ரூபாய்கள்…
  • பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்று உதவிய அமைச்சர்கள் கேடிஆர், சத்தியவதி ராதோட்…

ஏழை காய்கறி வியாபாரி தன் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்து வந்த இரண்டரை லட்சம் ரூபாய்களை எலி கடித்த சம்பவம் மகபூபாபாதில் நடந்தது. இந்த சம்பவம் பற்றி அமைச்சர்கள் கேடிஆர், சத்தியவதி ராதோட் இருவரும் கேள்விப்பட்ட உடனே உதவிக்கு முன்வந்தனர்.

பாதிக்கப்பட்ட ரெட்யா நாயக் என்பவருக்கு உதவியாக துணை நின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்துவைத்த தொகையை எலி கடித்து விட்டதால் காய்கறி வியாபாரி ரெட்யா நாயக் வருந்தி அழுதார். அவருடைய பரிதாபமான நிலை குறித்து டிவியில் பிரத்தியேகமான செய்தி ஒளிபரப்பப்பட்டது.

அது குறித்து அறிந்து உடனடியாக உதவிக்கு இறங்கினார் அமைச்சர் கேடிஆர். அந்த கரன்சியை வாங்கிக்கொண்டு அவருக்குத் தேவையான பொருளாதார நிதி உதவி செய்ய வேண்டும் என்று மெகபுபாபாத் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

அதேநேரம் மாநில கிரிஜன நலத் துறை அமைச்சர் சத்யவதி ராதோட் கூட உதவிக்கு முன்வந்தார். பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

rat destroyed rupee notes - 2026

இரு அமைச்சர்களின் உத்தரவுப்படி களத்தில் இறங்கிய மண்டல ரெவின்யூ அதிகாரிகள் இந்திரா நகர் தண்டாவில் உள்ள ரெட்யா நாயக் வீட்டிற்கு சென்றார்கள். கரன்சி நோட்டுகளின் விவரங்களை சேகரித்தார்கள்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

இது இப்படி இருக்க இருக்கையில்… அமைச்சர் சத்யவதி ராதோட் பாதிக்கப்பட்ட ரெட்யா நாயக்கிற்கு போன் செய்தார். ரெட்யா சேமித்து வைத்த பணத்திற்கு இணையான நோட்டுகளை மீண்டும் அளிக்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தார். அதேபோல் அவர் வேண்டிக் கொண்டபடியே அவருக்கு நல்ல விதமான மருத்துவம் கூட அளிப்போம் என்று உத்தரவாதம் அளித்தார்.

rat destroyed rupee notes2 - 2026

பண விஷயத்திலும் மருத்துவ சிகிச்சை விஷயத்திலும் எப்படிப்பட்ட கவலையும் உங்களுக்கு தேவை இல்லை என்று ரெட்யா நாயக்கிற்கு அமைச்சர் சத்தியவதி தைரியம் கூறினார்.

அமைச்சர்கள் உதவுவதால் ரெட்யா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அமைச்சர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending