திருவானைக்கா கோயில் பிரசாத ரேட்… ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயிடுச்சே! ‘விடியல்’ எப்போ?

thiruvanaikka prasada stall - 2026

ஏழைகளுக்கு எட்டா கனியான திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதம்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் – அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.

மேலும் மிக சிறிய கன்டெய்னர் பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை மிக அதிகமாக நாற்பது ரூபாய் எனவும், சர்க்கரை பொங்கல் நாற்பது ரூபாய், வடை பத்து ரூபாய் என மிக அதிக அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

மேலும் இதே அளவுள்ள பிரசாத பொருட்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏனைய திருக்கோவில்களில் பதினைந்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் திருவானைக்காவல் திருக்கோவிலில் பிரசாதத்தை கோவில் நிர்வாகமே நேரடியாக விற்பனை செய்து வருகிறது.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

ஆனால் மற்ற திருக்கோவில்களில் வெளி நபர்களுக்கு பிரசாத ஸ்டால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.ஆனால் திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் பிரசாதத்தில் கொள்ளை லாபம் சம்பாத்திக்க நினைப்பது தர்மத்திற்கு எதிரானது.

மேலும் மேற்படி பிரசாத பொருட்களுக்கு பில், டோக்கன் உள்ளிட்ட எதையும் பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு திருவானைக்காவல் திருக்கோவில் நிர்வாகம் வழங்குவது இல்லை. அப்புறம் எப்படி பிரசாத விற்பனை தொடர்பான முறையான கணக்கு பரமாரிக்க முடியும்…?

மேலும் மேற்படி பிரசாத ஸ்டாலில் விலை பட்டியல் இல்லை.
திருக்கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டு போர்டு வைத்துள்ள திருக்கோவில் நிர்வாகமே, பிளாஸ்டிக் கன்டெய்னரில் தான் பிரசாதங்களை விற்பனை செய்வது கூடுதல் வேதனை.

எனவே இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் @PKSekarbabu, ஆணையர் மற்றும் திருக்கோவில் EO உள்ளிட்ட அதிகாரிகள் ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ள திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் என்பது பக்தி வேண்டி தான். வர்த்தக மையமாக மாற்ற கூடாது. ஜெய்ஹிந்த்…

  • புகழ் மச்சேந்திரன், திருச்சி
ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories