வாட்ஸ்அப்பை ஓரங்கட்டி முன்னேறும் இந்திய சந்தேஷ்!

Published:

whatsapp
whatsapp

நாம் இருக்கும் இடம் தான் உலகம் என்று வாழ்ந்துகொண்டிருந்த காலம் போய் தற்போது நம் கைக்குள் உலகம் அடங்கியிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் அவ்வாறு செய்திருக்கின்றன.

இந்த டெக் உலகத்தில் சமூக வலைதளங்கள் தான் மக்களின் பிரதான சாய்ஸாக உள்ளது. முழு நேரமும் அதிலே மூழ்குபவர்களும் உண்டு. பார்மலிட்டிக்காக வைத்திருப்பவர்களும் உண்டு.

அனைவரும் ஏதோ ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். உலகளவில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் கோலோச்சுகின்றன.

இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் புதியவர்களை உள்ளிழுக்கவும் அவர்களின் பயன அனுபவத்தை மகிழ்ச்சியாக்க புதுப்புது அப்டேட்கள், அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.

இம்மாதிரியான நேர் வழியில் சென்றாலும் நம்பிக்கையின்மையால் சந்தையில் நிலைத்து நிற்க குறுக்கு வழியிலும் ஈடுபடுகின்றன. அதாவது போட்டி நிறுவனங்களே இல்லாமல் ஆக்குவது அல்லது அந்நிறுவனத்தை பெரும் தொகைக்கு வாங்கி அதையும் தனக்கு கீழ் கொண்டுவருவது. பேஸ்புக் நிறுவனம் அப்படி தான் வாட்ஸ்அப்பையும் இன்ஸ்டாவையும் விலைக்கு வாங்கியது. இதனால் தங்களை தவிர வாடிக்கையாளர்கள் வேறு செயலியைப் பயன்படுத்த கூடாது என்ற நிலையை உருவாக்குகிறார்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அவர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க நம் நாட்டில் அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது. இந்திய சட்டங்களுக்கு உடன்படாமல் மத்திய அரசுக்கு தண்ணி காட்டுகின்றனர். உதாரணமாக மத்திய அரசின் புதிய ஐடி விதிகளுக்கு உடன்பட முடியாது என ட்விட்டர் நிறுவனம் சமர் புரிந்து வருகிறது.

இது ஒருபுறம் என்றால் இந்தியர்களின் தனிப்பட்ட பிரைவசி தகவல்களும் திருடப்படுகின்றன. தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளரின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான சமூக வலைதளங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே ட்விட்டருக்குப் போட்டியாக கூ (koo) என்பதை அறிமுகப்படுத்தியது.

sandesh-app
sandesh-app

இது இந்தியர்களிடம் வரவேற்பை பெற்று பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது. இச்சூழலில் தற்போது வாட்ஸ்அப்புக்கு போட்டியாக சந்தேஸ் (sandes) என்ற புதிய செயலி மற்றும் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.

செய்தி (Message) என்பதற்கு இந்தியில் சந்தேஸ் என்று பொருள். வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் இருப்பது போல் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இதில் ஒருவருக்கு மெசெஜ் செய்யலாம், வீடியோ, புகைப்படங்கள், பிடிஎஃப் ஆவணங்கள் என அனைத்தையும் அனுப்பலாம். ஆரம்பத்தில் அரசு அதிகாரிகளும் ஏஜென்சி ஆட்களும் பயன்படுத்துவதற்காகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மொபைல் எண் அல்லது @mygov.in என்ற இந்திய அரசின் மின்னஞ்சல் முகவரி கொண்டு புதிய கணக்கை உருவாக்கலாம்.

ஜிமெயில் போன்ற இதர மெயில் ஐடி கொண்டு தொடங்க முடியாது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img