தண்ணீர் அடித்து தாகம் தணிந்த யானை! வைரல்!

Published:

elephant
elephant

யானை ஒன்று கை பம்பில் தண்ணீர் அடித்து தாகம் தணிந்த வீடியோ இணையத்தில் வைரலாக உலாவி வருகிறது. தண்ணீரின் தேவை யானை உணயர்ந்திருப்பதால் தேவையான அளவு மட்டுமே பம்பிலிருந்து இரைத்து குடித்துள்ளது என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

அதோடு அந்த யானையை ‘ஜீனியஸ்’ எனவும் நெட்டிசன்கள் அழைத்து வருகின்றனர். அதே போல இந்த யானைக்கு தெரிந்த தண்ணீர் சிக்கனம் கூட சில மனிதர்களுக்கு தெரியவில்லை என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இந்த வீடியோ மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளது. அதே போல இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுக்கு பிடித்த கேப்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img