கனவின் விளைவு: இப்படி கண்டால் விநாயகர் வழிபாடு அவசியம்!

அடடே... அப்படியா? நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
vinayagar
vinayagar

யானையை கனவில் கண்டால்
திருமணம் ஆகாதவருக்கு திருமணம் கைக்கூடும்.

யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால்:

உங்களை யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களுடைய அனைத்து காரியங்களிலும் தோல்வி நீங்கி வெற்றி‌ கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும்.

யானைக்கு உணவு கொடுப்பது போன்றோ அல்லது யானை வீட்டு வாசலில் நிற்பது போல் கனவு கண்டால் நன்மைகள் நடக்கப்போகிறது என்று பலன்.

dream
dream

யானை மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

யானையின் மீது சவாரி செய்வது போல் கனவில் கண்டால் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி அடையும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும், சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

உங்கள் மீது யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் உங்களை தேடி பெரிய பதவி வரப்போகிறது என்று அர்த்தமாகும். மேலும் உங்களுக்கு வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்:

உங்களை யானை துரத்துவது போல் கனவில் வந்தால் , பழைய விஷயங்களால் மனச்சங்கடங்களும் புதிதாக ஏதோ பிரச்சனையும் நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை வழிபாடு
செய்து வரவேண்டும்.

elephant - 2026

மதம் பிடித்த யானை கனவில் வந்தால்:

மதம் பிடித்த யானையை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும் என்பதன் அறிகுறியாகும்.

பெண் யானையை பார்ப்பது போல் கனவு கண்டால்:

-கனவில் பெண் யானையை பார்ப்பது போல் வந்தால் குடும்பத்தில் உள்ள பெண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

யானையை பார்த்து அச்சம் கொள்வது போல் கனவு கண்டால்:

யானையை பார்த்து பயப்படுவது போன்று கனவு கண்டாலோ அல்லது நீங்கள் செல்லும் பாதையை யானை தடை செய்வது போன்று கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.