அம்மனின் தலையில் அமர்ந்திருந்த நாகம்! பக்தர்கள் பரவசம்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம்
amman
amman

ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.

பக்தர்களை அதிசயிக்கும் வகையில் அவ்வப்போது சில கோயில்களில் வித்தியாசமான சம்பவங்கள் நடப்பது உண்டு அப்படித்தான் ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து காட்சி தந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளஇடை நல்லூரை சேர்ந்தவர் ரவி விவசாயி இவருடைய விளைநிலத்தில் அவர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கட்டியுள்ளார் . கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த நிலையில் நாற்பது நாட்கள் சிறப்பு பூஜை நாட்களாக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர் இன்று அதிகாலை ரவி பூஜை செய்ய கோவிலுக்குச் சென்றபோது விக்ரகத்தில் இருந்து திடீரென என சத்தம் வந்துள்ளது.

திரும்பி பார்த்தபோது நாகப்பாம்பு படை எடுத்த படி அம்மன் சிலை மீது உட்கார்ந்திருந்தது இதை கண்டதும் ரவி அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து கிராம மக்களுக்கு தெரிவித்தார்,

பின்னர் அப்பகுதி பொதுமக்கள் குருபட்டி மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் இடை நல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக அம்மனுக்கு பூஜை செய்தும் பாம்பை தரிசித்து வணங்கி செல்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.