ஏர்டேக்கால் பயத்தில் இரவு முழுவதும் காரிலே சுற்றிய பெண்! எச்சரிக்கும் காவல்துறை!

Airtake - 2026

தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கைமுறையை எளிதாக்கிவிட்டது உண்மைதான் என்றாலும், அதனால் சில குற்றச்சம்பவங்களும் பெருகிவிட்டன.

அந்த வகையில் ஆப்பிள் ஏர் டேக் மூலம் பெண் ஒருவர் காரில் பின் தொடரப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஏர்டெக்கை கண்டுபிடிக்க முடியாததால் விடிய விடிய காரிலேயே அப்பெண் இருந்துள்ளார்.

பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. இதற்காக ஒரு கருவியை கண்டிபிடித்தது ஏர் டேக் ஆப்பிள்

இதனை நீங்கள் எந்த பொருளில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டு நாய்க்குட்டியிடம் கூட இணைத்து வைக்கலாம்.

அது இணைத்து வைக்கப்பட்ட பொருள் எங்காவது காணாமல் போனாலோ, அல்லது வைத்த இடத்தை நாம் மறந்து விட்டாலோ ஏர் டேக் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். செல்போன் செயலி மூலம் அந்த பொருள் இருக்கும் லொகேஷனை கண்டுபிடிக்கலாம்.

ஒருவேளை அந்தபொருள் திருடப்பட்டது என்றால் கடைசியாக எந்த லொகேஷனில் இருந்தது எனக் காட்டும். அதேபோல் உங்கள் ஏர்டேக் தனியாக போய்விட்டால் அதில் உள்ள ஸ்கேனிங்கை பயன்படுத்தி ஓனரை கண்டுபிடித்துவிடலாம்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இப்படி ஒரு பாசிட்டிவ் பக்கம் இருந்தாலும், இந்த டிவைஸை பயன்படுத்தி மற்றவர்களின் ரகசியங்களும் எடுக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேக், அல்லது உங்கள் காரில் ஏர் டேக்கை ஒருவர் வைத்துவிட்டால் நீங்கள் செல்லும் இடத்தை எல்லாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

அப்படித்தான் அமெரிக்க பெண்மணி பின் தொடரப்பட்டுள்ளார். காரில் சென்ற அவருடைய போன் மர்மமான ஏர் டேக் இருப்பதை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்துள்ளது.

வாகன நெரிசலின் போதோ கூட்டத்தில் நிற்கும் போதே ஏர்டேக் எச்சரிக்கை வருவது இயல்பே. அதனால் வாகன நெரிசலில் இருந்து விலகி சென்றுள்ளார் அப்பெண். ஆனால் கார் தனியாக சென்றுகொண்டிருக்கும் போதும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

தன்னுடைய காரில் தான் மர்ம ஏர்டேக் இருப்பதை உணர்ந்த அப்பெண் கைப்பை, கார் என பல இடங்களிலும் தேடியுள்ளார். அப்போது மணி இரவு 2.

தன்னுடைய லொகேஷனை யாரோ தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்பதால் அந்த நேரத்தில் வீட்டுக்கு செல்வதும், அல்லது ஒரே இடத்தில் இருப்பதும் ஆபத்து என்பதை உணர்ந்து விடிய விடிய காரில் சுற்றியுள்ளார்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விடிந்ததும் நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார் அப்பெண். காரை சல்லடைப் போட்டு தேடியதில் முன் சீட்டின் கீழ்ப்பகுதியில் அந்த மர்ம ஏர் டேக் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக ஏர்டேக்கை தூரமாக எடுத்து வீசியுள்ளார் அப்பெண். அதனால் அதன் சீரியல் நம்பரை பெற முடியாமல் போனதாகவும், காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்பங்களை மிகவும் கவனமாகவும், விவேகமாகவும் கையாள வேண்டும் என்றும், சில நேரம் நமக்கே அது எதிராக சென்றுவிட வேண்டும் என்றும் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற நேரங்களில் உடனடியாக காவல்துறை உதவியை நாடலாம் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories