இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்: ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள்!

Published:

India Post Payment Bank - 2026

இந்திய தபால் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் அனுப்பினால் அல்லது பணம் டெபாசிட் செய்தால் அதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

அடிப்படை சேமிப்பு கணக்குகளில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை வித்டிரா செய்ய முடியும்.

ஐந்தாவது முறை வித்டிரா செய்தால் அதற்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 0.50 சத வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பணம் டெபாசிட் செய்வதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.

ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். அடிப்படை சேமிப்பு கணக்குகள் தவிர மற்ற சேமிப்பு கணக்குகளும் நடப்பு கணக்குகளுக்கும் ஒரு மாதத்தில் 25 ஆயிரம் வரையில் வித்திட்ட செய்தால் அதற்கு கட்டணம் கிடையாது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அந்த வரம்பை மீறி பணம் எடுக்கும்போதே 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.

டெபாசிட்டை பொருத்தவரையில் அடிப்படை சேமிப்பு கணக்கு தவிர மற்ற சேமிப்பு கணக்குகளில் இரு மாதத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரையில் டெபாசிட் செய்யலாம்.

அதனைத் தாண்டி டெபாசிட் செய்யும் போது கட்டணம் செலுத்த நேரிடும். ஆதார் இணைப்புடன் கூடிய பேமெண்ட் அமைப்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலமாக பண பரிவர்த்தனை செய்தால் கட்டணம் எதுவும் இல்லை.

இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Related articles

Recent articles

spot_img