thiruveteeswaranpettai temple marriage stop - 2026

கோயிலில் கிறிஸ்துவர் திருமணமா? இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் ரத்து!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை
thiruveteeswaranpettai temple marriage stop - 2026
#image_title

இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் எதிர்ப்பின் விளைவாக திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் கோயிலில் நடக்க இருந்த கிறிஸ்தவ திருமணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது விழிப்படைந்த இந்து சமுதாயத்திற்கு கிடைத்திட்ட வெற்றி என்று இந்து முன்னணியினர் கூறினர்.

சென்னை திருவேட்டீஸ்வரர் கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக, சமூகத் தளங்களில் பரவலாக வெளியான பத்திரிகையால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அத்திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோயிலில் வரும் ஜூன் முதல் தேதி திமுக., மகளிர் அணி, வட்ட துணைச் செயலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக பத்திரிகை ஒன்று வெளியாகி இணைய தளங்களில் வைரலானது. இதை அடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கத்தினர், கோவிலில் வைத்து கிறிஸ்தவ திருமணத்தை நடத்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இது குறித்து இந்து முன்னணி அமைப்பினர் கோயில் நிர்வாகத்திடம் புகார் மனுவும் அளித்தனர். இதனால், கோவில் நிர்வாகத்தினர், திருமணம் நடத்த இருந்த குடும்பத்தாரை விசாரணைக்கு அழைத்து, பரிசுத்த மெய் விவாஹ பத்திரிகை குறித்து விவரத்தைக் கேட்டனர். அதற்கு திருமணம் செய்து கொள்பவர்கள் ஹிந்து மதத்தவர்கள்தான் எனவும், மணமகனின் அண்ணன் கிறிஸ்துவராக மாறி திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பத்திரிகையை மாதிரியாக வைத்து தவறுதலாக அச்சிடப்பட்டு விட்டது என விளக்கம் அளித்து, கடிதம் கொடுக்கப்பட்டது.

எனினும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த திருமணத்திற்கு அனுமதி மறுத்து, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவில் செயலர் அலுவலர் கங்காதேவி, திருமணம் செய்து் கொள்ளும் குடும்பத்தாருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.

அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள் வரும் ஜூன் மாதம் முதல் தேதி கோவிலில் திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் வேற்று மத முறைப்படி திருமண அழைப்பிதழ் அச்சடித்துள்ளீர்கள். எனவே கோவிலில் இந்த திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் இந்தத் திருமணத்திற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் நன்கொடையாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.