இவன் ரொம்ப நல்லவன்னு… சொல்லிட்டான்மா..

நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
vadivelu comedy - 2026

அப்ப நான் நெய்வேலி சூட்டிங் ஸ்பாட்’ல இருந்தேன்.. முதல்ல ஒரு 4 ஆபீஸர்தான் வந்தானுங்க.. சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்’னு கூப்டாங்க..

வாயாலதான பேசுவாங்க, காதாலதான கேக்கப் போறோம், அப்பிடின்னு நினைச்சி வாங்க கேரவன் உள்ள போவோம்னு சொன்னேன்..

அதெல்லாம் முடியாது, சென்னை போகனும்னு சென்னாங்க.. சரி, நீங்க முன்னால போங்க நான் என் கார்ல வர்றேன்னு சொன்னேன்..

இல்ல, நாம டிபார்ட்மென்ட் இன்னொவால போவோம்னு கூப்டாங்க..

4 மணி பிரயாணம்தான் அப்படின்னு நம்பி ஏறி உக்காந்தேன்.. கூட வந்த 4 ஆபீசரும் மாத்தி மாத்தி 4 மணி நேரம், நெய்வேலியில இருந்து வடபழனி வரைக்கும் ஊமைக்குத்தா குத்தி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டினாங்க..

திடீர்னு ஒருத்தன் போன் போட்டு, டேய் வாடா ஒருத்தன் சிக்கிருக்கான்னு சொன்னான்.. அவன் சொன்னான், மாப்ள நான் பிஸியா இருக்கேன்.. இங்க பனையூருக்கு அனுப்பிவுடுன்னான்..

பனையூர்ல மொத்தம் 11 ஆபீசருங்க… அவுங்களாள எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு …மூச்சுத் திணற திணற வாயிலயே குத்தி வகுத்துல இருந்த சாணிய பூரா வாய்வழியா எடுத்துட்டானுங்க.. அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்..

அப்புறமா அங்க இருந்து ஒரு குப்ப லாரியில ஏத்திவிட்டாங்க… சரி வீட்டுக்குத்தான் போறோம்னு நம்ம்ம்ம்ப்ப்பி ஏறி உக்காந்தேன்..

ஆனா அந்த குப்ப லாரி, தி நகர் சாலிகிராமம் வீடு, ஆபீஸ்னு 15 மணி நேரம் அக்கக்கா உடம்பு முழுக்க அங்குலம் அங்குலமா பிரிச்சி மேஞ்சிட்டு என்னை சக்கையா மதிச்சிட்டு போயிட்டாங்க..

அடிக்கும் போது ஒரு ஆபீசர் சொன்னான்… எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா… இவன் ரொம்ப நல்லவன்னு… சொல்லிட்டான்மா..????????????????

#பகிர்வு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.