சபரிமலை கெடுபிடிகள்… குமுறும் பக்தர்கள்…

Published:

police in sabarimala - 2026

இந்த வருடம் சபரிமலையில் கடுமையான சட்ட திட்டங்களை முன்னறிவிப்பின்றி அமுல்படுத்தியிருப்பதாக மாநில இடதுசாரி அரசை சாடுகின்றார்கள் பக்தர்கள்.

முதலில், கோயில் சந்நிதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே தவறு என்று கருத்து தெரிவிக்கும் பக்தர்கள், கூடி ஒரு குழுவாகத்தான் மலைக்கு வருவோம். அனைவரும் சேர்ந்து சரணகோஷம், பாடல்கள் பாடுவோம். ஆனால் 144 ஐக் காரணம் காட்டி, வாய் திறந்தாலே குற்றம் என்கிறார்கள் என்று குமுறுகின்றனர்.

இன்று முதல் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை பஸ் டிக்கட் அப் & டவுண் சேர்த்தே எடுக்க வேண்டும். மேலும், அந்த டிக்கட் 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு இரவு 8 மணிக்கு கடைசி பேருந்து புறப்படும்.

இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை எவரும் பம்பை அடிவாரத்தில் இருந்து மலையில் ஏறக்கூடாது.

இரவு 11 மணிக்கு மேல் சபரிமலையில் யாரும் தங்க கூடாது… மீறி தங்குபவர்கள் கைது செய்யப்படுவார்கள்… நேற்று இரவு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

சன்னிதான நடை அடைத்தபிறகு எந்த ஒரு உணவுக் கூடங்களும் திறக்கக்கூடாது.

பதினெட்டாம் படி நெருங்கும்போது சரணகோஷம் விளிக்கக் கூடாது.

இவைபோன்ற கெடுபிடிகளை கேரள அரசு அமுல்படுத்தி இருப்பதாக பக்தர்கள் மனம் வெதும்பிக் கூறுகின்றனர்.

Related articles

Recent articles

spot_img