வாபர் சமாதி வழிபாட்டை புறக்கணிப்போம் … தீர்மானம்!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி மதுரை லைஃப் ஸ்டைல்
IMG 20181208 WA0013 - 2026

கொடைக்கானலில் நடைபெற்ற சபரிமலை அய்யப்ப குருசாமிகள் – பக்தர்கள் வழிபாடு – பஜனை – பாத பூஜை – வெடி வழிபாடு – 18 படி பூஜை -அன்னதானம் என சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையில் வாபர் சமாதி வழிபாட்டுக்கு செல்வதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

” வாபர் சமாதி புறக்கணிப்பு செய்வோம்””அய்யப்பன் உள்ளிட்ட இந்து தெய்வங்களைமட்டும் தரிசனம் ” செய்வோம் என இந்த குருபூஜை நிகழ்ச்சி யில் தீர்மானிக்கப்பட்டது.

சரணம் கோஷம் முழங்கினால் மோட்சம் கிட்டும் என்ற நிலை மாறி சரணகோஷம் முழங்கினால்”கேஷ் -வழக்கு “கிட்டுகிறது…

இந்த நிலையை மாற்ற இருமுடி சுமந்து ஐயப்பனை மட்டும் தரிசனம் செய்வோம். தேவஸ்தானத்தில் இருக்கக் கூடிய உண்டியலில் காசு போட மாட்டோம்… காணிக்கை செலுத்த மாட்டோம்… என தீர்மானிக்கப்பட்டது.

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது . மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்ற கோரிக்கையை மையபடுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி மேதகு ஆளுநர் வழியாக பாரத நாட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.