
சீரழியும் கலாச்சாரமும், சீர்படுத்தாத அரசும்!
நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று சுவரில் விளம்பரங்கள் செய்யாதீர்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிய இடத்திலேயே ஆபாச போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இது தவிர கடையம் பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர் ஒட்டியுள்ள பகுதிகளை மக்கள் கடந்து செல்லும் போது மிக நெருடலாக உள்ளது.
இது போன்ற ஆபாச போஸ்டர்களை ஒட்டினால் நல்ல மாணவர்களின் மனநிலை கெட்டு கல்வி நிலை மாறி கலவி நிலைக்கு தள்ளிவிடும் என்பதால் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்று இச்செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக மாவட்ட செயலாளர் ஆனந்த பாபு தெரிவித்தார்.



