கனிமொழிக்கு ஒரு காட்டமான பதில்… ‘மோடி’ட்டு போங்க..!

Published:

kanimozhi - 2026

பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடு செல்லும் பணத்தை கொடுத்தாலே கிராமப்புற ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாம் என்று பேசி இருக்கிறார் கனி மொழி அவர்கள்.. இதற்கு நான் கண்டிப்பாக பதில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விட்டேன்.

கனி மொழி பிரணாபுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்தவருடன் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் போய் இருக்கிறார். அப்பொழு இந்த கனிமொழி நான் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் வரவில்லை அந்த பணத்தை இந்த ஏழைகளின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய பயன் படுத்திக்க கொள்ளுங்கள் என்று ஏன் சொல்ல வில்லை?

கனி மொழி இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக இருந்து விட்டார். இவருக்கு ஒரு அரசாங்கம் எப்படி நடக்கிறது என்றே தெரிய வில்லை. ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய இஷ்டம்போல் வெளிநாடு சுற்று பயணம் செய்ய முடியாது. உலக நாடுகளின் கூட்டங்கள் நடக்கும். அதில் ஒரு நாட்டு பிரதமர் கலந்துக் கொள்ள வேண்டும். உலக தலைவர்கள் கூடி பொது பிரச்சனைகளை பேசுவார்கள் அதில் ஒரு நாட்டின் தலைவர் கலந்துக் கொள்ள வேண்டும்.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

ஒரு நாட்டு தலைவர் வேறு நாட்டு தலைவரை தன நாட்டுக்கு அழைப்பார். அதில் அந்த நாட்டின் தலைவர் கலந்துக் கொள்ள வேண்டும். சில நேரத்தில் வேறு நாட்டின் சபைகளில் பேச வேண்டி இருக்கும். அதில் பேச கலந்துக்க கொள்ள வேண்டும் நமது பொருளாதாரத்தை உயர்த்த சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் அதற்காக நமது பிரதமர் போக வேண்டி இருக்கும். இப்படி பல காரணங்கள் இருக்கிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு இதுகூட தெரியவில்லை. கடந்த முறை இவர் தேர்ந்து எடுக்கப் பட்டது இவருடைய கட்சியின் சொந்த செல்வாக்கில் அல்ல. அடுத்தவர் முட்டு கொடுத்துதான் இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இவர் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட உறுப்பினரும் இல்லை. கனிமொழி இன்னும் இந்திய அரசியலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. கருணாநிதியால் பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர் இவர். அவர் இல்லை என்றால் கனிமொழி கனவிலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

மோடி ஒரு மாபெரும் தலைவர். இதை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துலகு தேர்ந்து எடுக்கப் பட்டவர். கனிமொழியால் வேறு மாநிலத்தில் தேர்தலில் நிற்க முடியுமா? சிறிது நினைத்துப் பார்.

  • வேதம் மது

Related articles

Recent articles

spot_img