லயோலாவின் பொய் பித்தலாட்டம்! மன்னிப்பு கேட்டது கல்லூரி அல்ல!

Published:

loyola college art1 - 2026

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது வழங்கும் விழா, கலை விழா, ஓவியக் கண்காட்சி இவற்றில் ஹிந்து மத விரோத கருத்துகள் பரப்பப் பட்டும், ஒவியங்களில் மோடி, பாரதமாதா, அரசின் திட்டங்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக., இவற்றை விமர்சித்தும் வைக்கப்பட்டிருந்தன.

இது மிகப் பெரும் எதிர்ப்பை கல்லூரிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. கிறிஸ்துவ மதவெறி பிடித்த லயோலா கல்லூரி நிர்வாகம் இதற்கான பின்னணியில் இருந்த போதும், எதிர்ப்பு வந்தவுடன், நிகழ்ச்சியின் பொறுப்பாளர் காளீஸ்வரன் என்பவரை கைகாட்டி ஒதுங்கிக் கொண்டது.

எதிர்ப்புகள் வலுத்ததால், காளீஸ்வரன் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி, ஊடகங்களில் கொடுத்தார். லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டு விட்டது என்று ஊடகங்களும் செய்தி கொடுத்தன. ஆனால், இந்தக் கடிதத்தில் எவர் கையெழுத்தும் இல்லை என்பது இப்போது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

veethi vizha loyola statement 1 - 2026

லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்கவில்லை.. யாரோ காளீஸ்வரன் என்பவர்தான் எழுதியிருக்கிறார்.. அதில் எந்த கையெழுத்தும் இல்லை… லெட்டர்ஹெட்டில் இது வெளியிடப்படவில்லை.. எவர் வேண்டுமானாலும் இப்படி ஒரு கடிதத்தை டைப் செய்து, அதில் லயோலா கல்லூரி என்று தலைப்பு வைத்து கல்லூரி நிர்வாகி யாரோ ஒருவர் பெயரைச் சொல்லி, சமூக வலைத்தளங்களில் பதிவிட முடியும். நாளை லயோலா கல்லூரி இது எங்கள் கடிதம் இல்லை என்று மறுக்கவும் முடியும்.!

எனவே, லயோலா கல்லூரியின் அறிக்கை உண்மையானதுதானா என விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த பொழுது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகத்தின் கையெழுத்து இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மருத்துவமனை நிர்வாகத்தின் கையெழுத்து இருந்தது.

ஆனால் லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசவிரோத நக்சல் ஆதரவு, பிரிவினைவாத சக்திகள் நடத்திய கண்காட்சிக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதாக சொல்லும் லயோலா கல்லூரியின் காளீஸ்வரன் அக்கையில் யாருடைய கையெழுத்து இருக்கிறது ? தேடிப் பார்த்தால், அப்படி ஒருவர் கையெழுத்து என்று எதுவும் இல்லை.

எனவே, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறும் இந்த கருத்தியல் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தேசபக்தர்கள் அணிதிரள வேண்டும். உங்களுடைய மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. சட்டரீதியாக நீங்கள் தண்டிக்கப்படும் வரை எங்களுடைய போராட்டம், நீதிமன்றத்திலும் இருக்கும் வீதி மன்றத்திலும் இருக்கும்… என்று பொருமுகிறார்கள் ஹிந்து அமைப்பினர்.

இந்நிலையில் நாளை லயோலா கல்லூரியை எதிர்த்து, மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img