கஜா பாதிப்பில் இருந்து மீட்ட மின் ஊழியர்களை கொடியேற்றச் சொன்ன பள்ளி!

அடடே... அப்படியா? சற்றுமுன் திருச்சி
gaja cyclone eb workers - 2026

கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயலில் இருந்து, மின் கம்பங்களைச் சரிசெய்து, பாதையை சீர் அமைக்கும் பணியினை சிறப்பாகச் செய்த மின்வாரிய ஊழியர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து தேசியக் கொடியை ஏற்றச் சொல்லி மரியாதையை செய்தனர் தனியார் பள்ளி மாணவர்கள்!

டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது கடந்த வருடம் வீசிய கஜா புயல். மரங்கள் அதிகம் வேரோடு சாய்ந்தன. அவை மின் கம்பங்களிலும் கம்பிகளிலும் விழுந்து, மின்சார விநியோகம் பெரும் பாதிப்பை அடைந்தது.

இந்நிலையில் மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டு, இரவு பகலாக அயராது உழைத்த தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் பணியினைப் பாராட்டி, அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் பாராட்டும் விதமாகவும் தங்கள் பள்ளி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அவர்களை வரவேற்று, கொடியேற்ற வைத்து பெருமை சேர்த்துள்ளனர் டெல்டா பகுதி தனியார் பள்ளி மாணவர்கள்!

1 thought on “கஜா பாதிப்பில் இருந்து மீட்ட மின் ஊழியர்களை கொடியேற்றச் சொன்ன பள்ளி!”

  1. மனம் நெகிழ்ச்சி அடையும் செய்தி இது. சிரமத்தில் இருந்த மக்களுக்கு மிகுந்த சிரமப்பட்டு சீரமைத்த மின் துறை ஊழியர்களுக்கு இது ஒரு வெகுஜன விருது. இது மதிப்பில்லா விருது. காலம் முழுமைக்கும் விருது கொடுத்தவரும் விருது பெற்றவரும் பெருமை kollalam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.