pachaimuthu - 2026

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? (அ) கூட்டணி கட்சிகளுடன் போட்டியா? என்பது குறித்து இன்று மாலை நடைபெறும் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பச்சைமுத்து!

மேலும், எந்தச் சூழலிலும் யாரிடமும் தொகுதிக்காகவோ, தோழமைக்காகவோ எங்கள் கட்சி காத்திருக்காது என்று கூறியுள்ளார்.

பாஜகவுக்கு கடந்த காலங்களில் நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம். மோடி, அமித்ஷாவை எனக்கு நன்கு தெரிந்திருந்தும் தமிழக தலைவர்கள் எங்களை புறக்கணிப்பது போல செயல்பட்டனர் என்று வருத்தம் தெரிவித்தார் பச்சமுத்து.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையுடன், பழைய மரியாதையையும் சேர்த்து கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வது குறித்து பரிசீலிப்போம் என்று கூறினார் ஐஜேகே தலைவர் பச்சைமுத்து!

பச்சைமுத்துவுக்கு சொந்தமாக எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் உள்ளது. மேலும், ஊடக விவகாரங்களில் தற்காப்புக்கும் விளம்பரத்துக்கும் என புதிய தலைமுறை டிவி., பத்திரிகை என ஊடகங்களும் உள்ளன. ஆனால், மோடி எதிர்ப்பு, பாஜக., எதிர்ப்பு, மத்திய அரசின் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது, திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, தீவிர தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு ஒத்தூதுவது என பாஜக., எதிர்ப்பு அரசியலையே ஊடகத்திலும் செய்து வந்தது இந்தக் குழுமம்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இது தமிழக பாஜக.,வினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மோடி தமிழகத்தில் சென்னைக்கு வந்திருந்த போது, கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றதும், ஆளுநர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, இந்த டிவி நிறுவனம் மேற்கொண்ட துர் பிரசாரங்களும் பாஜக.,வினருக்கு நெருக்கடி ஏற்படுத்தியது உண்மை.

மேலும் எஸ்.ஆர்.எம். கல்லூரி முறைகேடுகளின் போது பச்சைமுத்து கைதாகி சிறை சென்றபோது பாஜக., கைகொடுக்கவில்லை என்ற ஆதங்கமும் பச்சைமுத்துவுக்கு இருக்கிறது. மத்திய அரசின் அண்மைக்கால பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. மேலும் நீட் விவகாரத்தின் போது, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப் பட வேண்டும் என்பதற்காக நீட் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி, பாஜக.,வுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி, மத்திய அரசின் திட்டத்தை அவதூறாகவும் பரப்பச் செய்வதில் கல்லூரியும் டிவியும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டன.

இந்நிலையில், ஐஜேகே குறித்து பச்சைமுத்து சொல்லியிருக்கும் கருத்தையும் கோரிக்கைகளையும் பாஜக.,வினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

One response to “கெஞ்சும் பச்சமுத்து..! மிஞ்சும் பாஜக.,!”

  1. His channel is anti Hindu. He is running SRM for business. He should be discouraged and negelected by BJP

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending