கோலி, டிவில்லியர்ஸ் பேனருக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

kohli de villers milk - 2026

கோலி – டி வில்லியர்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்து வந்துவிட்டது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல்.,போட்டி சீஸன். இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலிதான் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் கேப்டன்.

தற்போது கோலி வெற்றி வீரராக ஜொலித்து வருகிறார். இதனால் இந்த வருடம் ஐபிஎல் சீஸனின்ல் கோலியின் ஆட்டம் ஓஹோவென்று இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் படம் இடம்பெற்ற பேனர் பெங்களூர் நகரின் தெருக்களில் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, பெங்களூர் அணியின் ரசிகர் ஒருவர் பால் பாக்கெட்டை கிழித்து வழக்கமாக சினிமா நட்சத்திரங்களுக்கு செய்வது போன்று, பாலை பீய்ச்சி அடித்து கடவுள் விக்ரகங்களுக்குசெ செய்யும் அபிஷேகத்தைப் போல் செய்து இணையதளத்தில் கசிய விட்டார்.

இந்தியாவில் கடவுள் விக்ரஹங்களுக்கு பாலபிஷேகம் செய்வது பாரம்பரிய பழக்கம். அடுத்து ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்களின் படம் வெளியாகும் நாளில் இது போல் பாலை கட் அவுட்களுக்கு ஊற்றி, தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில், கோலி, டிவில்லியர்ஸ் படத்துக்கும் அதே பாணியில் செய்து, சினிமா நட்சத்திரங்களைவிட கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் அதே மவுசு உள்ளது என்று காட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.