சமூகத்தளங்களில் வெறுப்புச் செய்திகளை பரப்புகிறார்களா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

அடடே... அப்படியா? புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

wthatsapp - 2026

நீங்கள் வாட்ஸப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு மிக மோசமான, வெறுப்பு உணர்வைத் தூண்டக் கூடிய, அல்லது நாட்டுக்கு எதிரான செய்திகளை பார்வர்ட் செய்கிறார்களா?

இவ்வாறெல்லாம், தனிப்பட்ட வகையில் உங்களுக்கு மெசேஜ்கள் வருகின்றதா? நீங்கள் இவற்றால் மனதளவில் பாதிக்கப் பட்டால் உடனே அந்த செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து குறிப்பிட்ட மொபைல் நம்பரையும் இணைத்து டெலிகாம் துறைக்கு புகார் அனுப்பலாம்! இதனை டெலிகாம் துறை அதிகாரி கூறியுள்ளார்.

இதுபோன்ற புகார்கள் எங்களுக்கு வரும் பொழுது அவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று தொலைதொடர்புத்துறை கட்டுப்பாட்டாளர் ஜோஷி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

இவ்வாறு பொதுமக்களிடமிருந்து குறிப்பாக முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் இருந்தும் புகார்களாக டெலிகாம் துறைக்கு வந்தன என்றும், இதையடுத்தே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் இத்தகைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, இந்த ஆணையானது அனைத்து டெலிகாம் சேவை வழங்குபவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது! அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தவறான செய்திகளை எவரும் அளித்தாலும் பகிர்ந்தாலும், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! வாடிக்கையாளர் நன்னடத்தை ஒப்பந்தத்திலிருந்து மீறியதற்காக அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது!

எனவே, சோசியல் மீடியாவில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அந்தப் படத்தையும், அதை அனுப்பியவரின் மொபைல் எண்ணையும் ccaddn-dot@nic.in என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.