December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

ஒரு கிராமத்துக்கான வாக்குறுதியையே நிறைவேற்றாத கனிமொழி தொகுதிக்கு என்ன செய்வார்? கேட்டால் திமுக, குண்டர்கள் மிரட்டல்!

kanimoshi karuna - 2025

தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறி கணக்கு காட்டிய நிதியைக் கூட சரியாக விடுவித்து சொன்னதைச் செய்யாத கனிமொழி, ஒட்டுமொத்த தொகுதிக்கும் என்ன செய்து விடுவார் என்று கேள்வி எழுப்புகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக வேல் என்பவர்.

அவர் இது குறித்து கூறிய தகவல்… நான் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, ஶ்ரீவெங்கடேஸ்வரபுரம்(எ) பேய்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன். எங்களது கிராமம் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியால் தத்தெடுக்கப்பட்ட கிராமம்.

இந்த கிராமத்தை தத்தெடுத்த நேரத்தில் அவர் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம்!, ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்களது கிராமத்துக்கு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அவர் ஒதுக்கியதாக கூறிய தொகை ரூபாய் 3 கோடி. ஆனால் அவர் அறிவித்த தொகையில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நான் பெற்றேன். அந்தத் தகவல்களை ஆதாரமாக இணைத்துள்ளேன்..

kanimozhi scheme1 - 2025

கேள்வி 1. கனிமொழி எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

அதற்கான பதிலாக கனிமொழி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி மூலமாக கீழ்க்காணும் பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  1. சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார மருந்தகம் அருகே பயணிகள் நிழற்குடை அமைத்தல் 3 லட்சம் மதிப்பீட்டில்
  2. தெற்கு பேய் குளத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆறரை லட்சம் மதிப்பில்
  3. சந்தோஷ புரத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆறரை லட்சம் மதிப்பில்
  4. செங்குளம் ஆதிதிராவிடர் காலனியில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆறரை லட்சம் மதிப்பீட்டில் 5. வெங்கடேசபுரம் ஊராட்சியில் 2 லட்சம் லிட்டர் திறன்கொண்ட சம்பு அமைக்கும் பணி மோட்டார் ரூம் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கப்பணி 15 லட்சம் மதிப்பில்

கேள்வி-2 தொகையில் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எத்தனை?

பதிலில் மேற்குறிப்பிட்ட 5 பணிகளும் டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு மேற்குறிப்பிட்ட 5 பணிகளும் டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது

இது 2016ஆம் வருடம் பெறப்பட்ட தகவல். இந்நேரம், இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யப் படவில்லை!

kanimozhi scheme2 - 2025

ஒரு கிராமத்துக்கு கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாமல் எந்தப் பணியும் செய்யாமல், மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டவர்கள், தூத்துக்குடி தொகுதிக்கு நன்மை செய்யவா போகிறார்கள்?!! – என்று கேள்வி எழுப்புகிறார் சண்முகவேல்

மேலும், நான் கனிமொழி எங்கள் கிராமத்துக்கு அளித்த “வாக்குறுதிகளை அவருக்கு நினைவூட்டும் விதமாக இந்தத் தகவல்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன்.. அதைப் பொறுத்துக் கொள்ள”முடியாத திமுக குண்டர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கின்றனர்.. மேலும் எங்களிடம் நேரடியாக மோத முடியாமல் எங்களுடைய கல்வி நிறுவனமான சங்கர் கல்வி அறக்கட்டளை மீது சேற்றைவாரிப் பூசும் வகையில் சில பொய்யான தகவல்களை திமுக.,வின் சமூக ஊடகப் பிரிவு பரப்பி வருகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.. என்கிறார்.

இருப்பினும், சாலைப்புதூர் அரசு மருத்துவ மனைக்கு காமொன்ட் ஆர்ச் போடப்பட்டுள்ளது என்றும், கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்படவில்லை; 100 மரக் கன்றுகள் ஒரே இடத்தில் நடப்பட்டுள்ளது என்றும், இதுவரை மேல்நிலைத் தொட்டி எதுவும் செய்து கொடுக்கப் படவில்லை; பள்ளிகளுக்கு கழிவறையும் கட்டிக் கொடுக்கவில்லை என்றும் அந்தப் பகுதியினர் கூறுகின்றனர்.

ஒரு கிராமத்துக்கு செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி நிதி ஒதுக்குவதாகக் கூறி முறைகேடுகள் செய்து, எந்த பணியும் நடத்தித் தராமல் இந்த ஐந்து வருடத்தை ஓட்டியவர், இனி தொகுதிக்கு உறுப்பினராக வந்து நமக்கு என்ன செய்யப் போகிறார்? நமக்கு செய்வதாகக் கூறி அரசின் பணத்தை அவர்கள் முறைகேடு செய்து சுருட்டப் போகிறார்கள் அவ்வளவுதான் என்று பொருமுகின்றார்கள் இந்தப் பகுதி மக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories