இலவச கட்டாய கல்வியா? இது டான் பாஸ்கோ தெரியும்ல…?! மிரட்டும் பள்ளி!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கல்வி நெல்லை புகார் பெட்டி

christian school fees - 2026

கோவில்பட்டி மக்களிடையே வாட்ஸாப்பில் தனியார் பள்ளி ஒன்று மத்திய அரசின் இலவச கோட்டாவில் சீட் அளிக்க முடியாது என்று பெற்றோரிடம் அடவடியாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

6 முதல் 14 வயதுக்குப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

ஆனால் இதை தனியார் பள்ளிகள் நடைமுறை படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

Digital Kovilpatti பக்கத்தில் இருந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.