பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் புகார் பெட்டி

paliyal - 2026

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் கொடூரங்களிலிருந்து மக்கள் இப்பொழுது தான் மீண்டு வந்து கொண்டிருக்கும் சம்சயத்தில், தற்பொழுது அதே போன்ற சம்பவம் ஒன்று கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்ட புட்டூரில் நிகழ்ந்துள்ளது.

பெண்ணை அச்சுறுத்தி பதிவு
இச்சம்பவத்தில் ஐந்து ஆண்கள் ஒரு இளம் பெண்ணை அச்சுறுத்தி, எடுத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்கள் பதிவு செய்த காட்சி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து இளம் பெண் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம் பெண்ணின் அடையாளம்
செவ்வாய்க்கிழமை மாலை, 19 வயதுடைய கல்லூரி மாணவியை ஐந்து ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் வலைத்தளங்களில் கசியத் துவங்கியுள்ளது. இந்த வில் உள்ள இளம் பெண்ணின் அடையாளம் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

நேரடியாக காலத்தில் இறங்கிய காவல்துறை
காவல்துறையினரே அந்த பெண்ணை நேரடியாக சென்று பார்த்து, நடந்த சம்பவம் குறித்து வழக்குப் பதியும்படி கேட்டிருக்கிறது. காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் கீழ் அந்த பெண் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

SERUME - 2026

நண்பர்களாக இருந்த வஞ்சகர்கள்
வில் இருந்த ஐந்து ஆண்களும், அந்த பெண்ணின் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. ஐந்து ஆண்களும் வேறு வகுப்பில் கல்லூரி பயின்று வந்திருக்கின்றனர். இந்த பெண்ணிற்கு நல்ல நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டி பாலியல் வன்கொடுமை
இளம் பெண்ணை காரில் அழைத்துச் சென்று, காரில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைப் படம்பிடித்தும் உள்ளனர், நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் வை வலைத்தளங்களில் அப்லோட் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பயத்தில் யாரிடமும் கூறாத பெண்
இந்த சம்பவம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் நடந்துள்ளது. இவர்களின் அச்சுறுத்தலிற்குப் பயந்து அந்த பெண் யாரிடமும் இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

5 மாணவர்களும் கைது
வலைத்தளங்களில் பெண்ணின் பரவியதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிரஜ்வால், கிஷன், பிரக்யாத், குருநந்தன் மற்றும் சுனில் என்ற ஐந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

criam - 2026

சமூக வளைத்தளத்தில் பகிர்ந்தால் கைது
அதுமட்டுமின்றி வாட்ஸ் ஆப், பேஸ்புக் என எந்த தளத்திலும் மாணவியின் அல்லது புகைப்படங்களை ஷேர் செய்தல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் & மெம்பர்கள் கைது
வாட்ஸ் ஆப் குரூப்களில் கள் பகிரப்பட்டால் குரூப் அட்மின் முதல் குரூப் மெம்பெர்கள் வரை அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.jaill - 2026

ஐபிசியின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இதுபோன்ற பதிவுகளை மக்கள் யாருக்கும் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி களை பகிரவோ அல்லது டவுன்லோட் செய்யவோ தடை வைத்துள்ளது. இவற்றை மீறுபவர்கள் மீது ஐபிசியின் பிரிவு 354 சி (வோயுரிஸம்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இ (தனியுரிமை மீறல்) ஆகிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.