monkey 1 e1562650231620 - 2026உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் என்ற இடத்தில் குரங்குகள் இளைஞர் ஒருவரை சுற்றி வளைத்துத் தாக்கியது.

நிகுன்ஞ் கோயல் என்பவர் தனது நண்பரைப் பார்ப்பதற்கு நண்பரின் கடைக்குச் சென்றிருந்தார். கடையிலிருந்து திரும்பிய கோயலிடம் உணவுப் பொருள்கள்  இருப்பதாக நினைத்த குரங்குகள்  அவரைச் சுற்றி வளைத்தது.

அவர் எவ்வளவோ முயன்றும் அவைகளிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.நகங்களால் பிறாண்டியும், கடித்தும் அவரைக் காயப்படுத்தின. எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்ற கோயல் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோயல் தாக்கப்படும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending