போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!

P C.PERUMAL - 2026

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

சிலை கடத்தலில் 2 தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சமீபத்தில் பொன்.மாணிக்கவேல் சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

அந்த போலீஸ் நிலையத்தில் சம்பவத்தன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தியபோது பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிலை ஒன்று கிடந்தது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாலித்தீன் பையை பிரித்து பார்த்தபோது அந்த சிலை உலோகத்தால் ஆனது என்பதும், பெருமாள் சிலை என்பதும் தெரியவந்தது.

3 அடி உயரமும், 29 கிலோ எடையும் இருந்த சிலையை மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மன்னார்குடி தாசில்தார் கார்த்தியிடம் சிலையை ஒப்படைத்தார்.

போலீஸ் நிலையத்தில் கிடந்த பெருமாள் சிலையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆய்வுக்கு பிறகே சிலை ஐம்பொன்னால் ஆனதா? என்பது தெரிய வரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையத்துக்குள் பெருமாள் சிலையை கொண்டு வந்து வைத்தது யார்?

தேவையற்ற பொருட்களுடன் அந்த சிலை கேட்பாரற்று கிடந்தது எப்படி?

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டதா? போலீசாருக்கே தெரியாமல் இத்தனை நாட்கள் பெருமாள் சிலை போலீஸ் நிலையத்துக்குள் கேட்பாரற்று கிடந்தது ஏன்?

சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories