திருப்பதி பிரமோத்ஸவம்… தேரோட்டம் கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirupathi therottam - 2026

திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான ரத உத்ஸவம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது

திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவின் எட்டாவது நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

திருப்பதி திருமலையில் வருடந்தோறும் கொண்டாடப் படும் புரட்டாசி மாத நவராத்திரி விழாவின் போதான பிரம்மோத்ஸவம் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த செப். 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோத்ஸவம் விமர்சையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 4ம் தேதியும், தங்க ரதம் 5ம் தேதியும் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் திருப்பதி ஏழுமலையான் மலையப்பா சுவாமி ஒவ்வொரு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எட்டாவது நாளான இன்று மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளினார். இந்த வைபவத்தைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பதி திருமலையில் கூடியிருந்தனர்.

மலையப்ப சுவாமியின் தேரோட்டத்தில், ஆடல் பாடல்கள் என அன்பர்கள் உத்ஸாகத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.