திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1161 கோடி!

Published:

thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019ஆம் ஆண்டில் பக்தர்கள் ரூ.1,161.74 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் 2019ம் ஆண்டில் திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கடந்தாண்டு 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரம் லட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

ஜன. 1ம் தேதி 86,422 பேர் தரிசனம் செய்துள்ளதாகவும், காலை 3 மணி முதல் மாலை 6மணி வரையிலான நேரத்தில் 64,992 பேர் தரிசனம் செய்துள்ளதாகவும் தேவஸ்தான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டது.

Related articles

Recent articles

spot_img