காரமடை அருகே படியனூர் பழனி ஆண்டவர் தேர்த் திருவிழா!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் கோவை சற்றுமுன் விழாக்கள் விசேஷங்கள்
murugan - 2026

காரமடை அருகேயுள்ள படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் 100 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்றுவருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது.இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில்  தண்டாயுதபாணியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

இந்த சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் வருகின்ற 08-02-2020 அன்று 100 ஆம் ஆண்டு தைப்பூசத் திருத்தேர்  பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இரவு 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.இதனையடுத்து இரவு 9.30 மணிக்கு மேல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.