இந்த பதவி அடைய நாம் செய்ய வேண்டியது என்ன?

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்
pathavi - 2026

பகவான் பகவத்கீதையில் பார்த்தா மனிதர்கள் என்னை எவ்வாறு அணுகுகிறார்கள் அவர்களை நான் அவ்வாறு அணுகுகிறேன் எல்லாவற்றாலும் என் வழியை அனுசரிக்கிறார்கள் நாம் நமது வாழ்க்கையை நிதானத்தோடும் தர்மத்தோடு அமைத்துக் கொண்டால் நமது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும் முதல்படியாக நமது நன்னடத்தையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மனிதர்கள் இரண்டு விதமாக உள்ளவர்கள். நல்ல குணங்களைக் கொண்டவன் உத்தமன் கெட்ட குணங்கள் கொண்டவன் அதமன் குணங்கள் மனிதனின் முக்கிய அளவுகோல் ஒரு மனிதனுக்கு எத்தனை பணம் சொத்து இருந்தாலும் எவ்வளவு வித்வானாக இருந்தாலும் சத்குணங்கள் இல்லாவிட்டால் உத்தமனாக இருக்கமாட்டான்

krishnar 1 - 2026

மற்றவை இல்லாவிட்டாலும் நற்குணங்களை கொண்ட மனிதன் உத்தமன் என்ற பதவியை அடையலாம்.

இதேபோல் பொறுமை மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்படுதல் ஆகிய இவ்விரண்டு குணங்களும் மனிதர்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பொறுமை இல்லாத மனிதன் கஷ்டங்களை சந்திப்பான் எவரும் அவனை விரும்ப மாட்டார்கள்

bharathi theerthar - 2026

அசத்தியத்தை பேசுவது தற்காலிகமான லாபத்தை கொடுத்தாலும் அதனால் உண்டாகும் துன்பங்கள் தாங்க முடியாததாக இருக்கும் இதற்கு மாறாக சத்தியம் பேசுவது தற்காலிகமான கஷ்டங்களை ஏற்படுத்தினாலும் நிரந்தரமான சுகம் சாந்தியும் கிடைக்கும்

பொறுமை மற்றும் சத்தியத்திற்கு கட்டுப்படுதல் இரண்டு குணங்களையும் வளர்த்துக் கொண்ட மனிதன் எல்லா இடங்களிலும் வெற்றி அடைவான் பகவத் பாதரின் வார்த்தைகள்.

adhi sankarar - 2026

உபநிஷத்தும் இதையே கூறுகிறது சத்யமேவ ஜயதே சத்தியமே வெல்லும் அசத்தியம் வெல்லாது எந்த பிரம்ம லோகத்தில் சத்தியத்தினால் அடையப்படும் அந்த மேலான லக்ஷ்யம் உண்டோ அந்த லோகத்தை ஆசைகள் நீங்கி ரிஷிகள் எந்த பாதையினால் அடைகிறார்களோ ஒளி பொருந்திய பாதை அமைக்கப்பட்டுள்ளது

அந்த சத்திய வாழ்க்கைக்கு நம்முடைய நன்னடத்தை முக்கியமான அளவுகோல் இந்த குணங்களை வளர்த்துக் கொண்டு நற்கதிஅடைவீர்களாக என்று மகா சன்னிதானம் அருளுரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.