பிற பெண்கள் விஷயத்தில் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை!

Published:

woman 1
woman 1

பிற பெண்கள் விஷயத்தில் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் ராமாயணத்திலிருந்து ஒரு சம்பவம் சீதாதேவியை இராவணன் இலங்கைக்கு தூக்கிச் சென்றான் தேவியைத் தேடி வந்த ஸ்ரீராமர் தன் சகோதரர் லட்சுமணனுடன் சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் வந்து இருந்தார்

அச்சமயம் சுக்ரீவன் இராமனிடம் அரக்கன் ஒருவன் யாரோ ஒரு பெண்மணி ஆகாய மார்க்கமாக தூக்கிக் கொண்டு போகும்போது அவள் தன்னுடைய ஆபரணங்களை எல்லாம் கழட்டி கீழே இருந்து கொண்டே சென்றால் அவற்றை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் அவை தங்களுடைய தானா என்று பாருங்கள் என்று கூறி ஒரு துணி மூட்டையை எடுத்து வரச் செய்தான்

bharathi theerthar - 2026

ராமன் தம்பி இந்த ஆபரணங்கள் சீதை தன் உடலில் அணிந்திருந்த தானா என்று பார் என லட்சுமணருடன் கூறினார் லட்சுமணன் அளித்த பதில்தான் நாம் அனைவரும் காலாகாலத்திற்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

ram lakman
ram lakman

தன்னுடைய குரலை மிகுந்த மரியாதையை காட்டி லட்சுமணர் அளித்த பதில், அண்ணா என்னை மன்னியுங்கள் இத்தனை காலம் நான் அண்ணியின் பாதங்களை மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன் ஆகையால் இந்த ஆபரணங்கள் அண்ணியின் உடலை அலங்கரித்த என்பதை என்னால் கூற இயலாது பிற பெண்களின் விஷயத்தில் ஆண்களுக்கு இருக்க வேண்டிய மனோபாவம் இதுதான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். என மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் உபதேசிக்கிறார்கள்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img