பிறப்பின் முடிவு: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.

இதை உணர்ந்தால் நாம் நம் இலட்சியத்தை அடைந்தவர்களாவோம். அந்த இலட்சியம்தான் முக்தி.

அதாவது, பிறப்பு-இறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுதலை அடைவதே முக்தியாகும். ஞானம்தான் முக்தியடைவதற்கான ஒரே வழியாகும்.

மனிதன் முற்பிறவியில் செய்த கர்மாக்களின் பலனாக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறான். ஒவ்வொரு ஜீவனும், நல்லதோ-கெட்டதோ, புண்ணியமோ-பாபமோ கர்மாக்களைச் செய்து கொண்டேதான் இருக்கிறான். இது இரண்டையும் செய்யாமல் அவனால் இருக்க முடியாது.

ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறான். ஒரு பிறவியில் செய்த கர்மம் நிச்சயமாக அவனுக்கு மற்றொரு பிறவியைத் தருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, ஆத்மஞானத்தை அடைவதுதான். அந்த ஞானம் பெற்ற பின்பு அவனுக்கு பிறவி என்பது கிடையாது.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.